×

லடாக் ஆக்கிரமிப்பு குறித்து வாய் திறக்கல.. மோடியை சீனாவின் தூதராக்கலாம்.! செல்வப்பெருந்தகை புதிய ‘ஐடியா’

பிரதமர் மோடி இயந்திரங்களை நம்பியே தேர்தலில் நிற்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: தமிழகத்தின் உரிமைகளை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி பறித்துள்ளார். அதற்கு எடப்பாடி உறுதுணையாக இருந்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை அமெரிக்க பொருளாதாரத்திற்கு எடுத்து செல்வேன் என கூறினார். பொருளாதாரம் அதள பாதாளத்தில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக வரலாறு காணாத கடனை உலக வங்கியில் வாங்கி உள்ளார். அது எங்கே போனது என்று தெரியவில்லை. தேர்தல் கடன் பத்திரம் மூலம் ரூ.6,900 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுள்ளார்.

இயந்திரங்களை நம்பி தேர்தலில் நிற்கிறார். மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ராகுல் காந்தி இளைஞர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை பெண்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் வாக்குறுதி அளித்துள்ளார். அதிமுகவோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று விஜயகாந்த் சொன்னார். தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள் என குற்றம் சுமத்தினாரே? இவர்களை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்குமா. அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வாயை திறக்கவில்லை. சீனாவை பார்த்து பிரதமருக்கு அவ்வளவு பயமா?. சீனாவின் தூதராக மோடியை நியமிக்கலாம். அதற்கு தகுதியானவர் என்று அவர்களது கட்சியை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். இதைவிட பதிலடி நான் கொடுக்க வேண்டுமா. இவ்வாறு பேசினார்.

The post லடாக் ஆக்கிரமிப்பு குறித்து வாய் திறக்கல.. மோடியை சீனாவின் தூதராக்கலாம்.! செல்வப்பெருந்தகை புதிய ‘ஐடியா’ appeared first on Dinakaran.

Tags : Ladakh ,Modi ,China ,State president ,Congress party ,Selvaperundagai ,Virudhunagar District Central Library ,Congress ,Manikam Tagore ,India Alliance ,Dinakaran ,
× RELATED லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ