×

கோடை வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது; தெலங்கானாவில் ‘மஞ்சள் அலர்ட்’: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பை: தெலங்கானாவில் கோடை வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள் அலர்ட்’ விடுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன் என 4 மாதங்கள் கடும் கோடை வெயில் காணப்படும். இந்த 4 மாதங்களில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். காலநிலை மாறுபாட்டால் ஒவ்வொரு முறையும் மழைக் காலங்களில் கூடுதலாக மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதேபோல் வெயில் காலங்களிலும் அளவுக்கு அதிகமான வெயில் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தாண்டு மார்ச் மாதம் ஓரளவு பாதிப்பு குறைவாக காணப்பட்டாலும் கூட, ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசும் எச்சரித்துள்ளது.
தெலங்கனாவில் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை (109.4 டிகிரி பாரன்ஹீட்) ெதாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மது, தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அல்லது சர்க்கரை பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால், 14 பெரிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வசதியாக குளிர்சாதன வசதி கொண்ட அறைகளை ஏற்பாடு செய்யும்படியும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கடந்த காலங்களை காட்டிலும் இந்தாண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், வெயில் தாக்கத்தில் இருந்து விடுபட முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post கோடை வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது; தெலங்கானாவில் ‘மஞ்சள் அலர்ட்’: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,INDIAN METEOROLOGICAL CENTRE ,TELANGANA ,India ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும், நாளையும்...