×

சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதிக்கு முக்கியத்துவம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து ப.சிதம்பரம் விளக்கம்!!

காரைக்குடி: சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்து ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;

பாஜகவுக்கு ப.சிதம்பரம் சவால்
மாநில உரிமைகளை மதிக்கும் ஒன்றிய அரசை அமைப்பது குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
மாநில உரிமைகள் குறித்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள 12 அம்சங்களில் ஏதாவது ஒன்றை ஏற்க பாஜக தயாரா? என்று அவர் சாவல் விடுத்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் வாக்குறுதிகள் ஒத்துப்போவது மகிழ்ச்சி
திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையான ஒன்றுதான். முரண்பட்ட கூட்டணியை காங்கிரஸ், திமுக அமைக்கவில்லை. சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்: ப.சிதம்பரம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாக்குறுதி அளிக்காதது ஏன் என ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.
I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைந்ததும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும். ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை குறைப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. செஸ் வரி குறைக்கப்படும்போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே குறையும் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதிக்கு முக்கியத்துவம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து ப.சிதம்பரம் விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Congress ,Karaikudi ,Former Union Minister ,Congress party ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு...