×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. பயங்கரவாதிகளின் ஊடுருவலை பாதுகாப்புப்படையினர் முறியடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி எல்லைப்பகுதி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை பாதுகாப்பு படையினர் கவனித்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு படையினர் முயன்றபோது, அந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன், ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சியவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

The post ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Uri ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...