×

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல்

சென்னை: விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய புகழேந்தி, நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அப்போது மேடையிலேயே மயங்கி விழுந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உயிர் பிரிந்தது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான என்.புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர் எங்களுடன் சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டதையும், அவருடன் பழகிய காலங்களையும் எண்ணி பார்க்கிறேன்.

அவரது பேச்சுகளும், மக்கள் சேவைகளும் இன்றும் எனது நினைவில் நீங்கா இடம் பெற்று நிற்கின்றன. என். புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்ற கழக தலைவர் மற்றும் தி.மு.க. நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் வேதனையோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

The post விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Wickravandi M. L. ,Tamil Nadu Congress Committee ,Chennai ,Vikriwandi M. L. ,Viluppuram District ,Vikriwandi MP Puzhendi ,Vikrawandi M. L. Tamil Nadu Congress Committee ,
× RELATED பொதுமக்களுக்கு உதவும் வகையில்...