×

பாராளுமன்ற தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை

*எஸ்பி வரவேற்று ஆலோசனை வழங்கினார்

திருப்பத்தூர் : பாராளுமன்ற தேர்தலை நல்ல முறையில் நடத்துவதற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு துணை ராணுவம் வந்துள்ளது. இந்த ராணுவத்தை எஸ்பி ஆல்பர்ட் ஜான் வரவேற்று ஆலோசனை வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பு உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நாள் அன்று தீவிர பாதுகாப்பு மற்றும் மேற்கொள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேற்று துணை ராணுவத்தினர் வந்தனர். அவர்களை எஸ்பி ஆல்பர்ட்ஜான் வரவேற்றார்.

அதன் பின்னர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் துணை ராணுவத்தினர் அணி வகுப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் பேசியதாவது: 500க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்துள்ளனர். இவர்கள் இந்த தேர்தலில் தகுந்த பாதுகாப்பு அளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பொருத்தவரை 106 பதட்டமான வாக்கு சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு துணை ராணுவத்தினர் அதிக அளவில் அங்கு பணியாற்றப்படுவார்கள். மேலும் மலைப்பகுதிகளான ஜவ்வாது மலை மற்றும் வாணியம்பாடி அருகே உள்ள நெக்கனா மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது.

ஆகையால் நீங்கள் வாகனத்தில் செல்லலாம் யாரும் மலை மேல் நடந்து செல்வதற்கோ அல்லது தலைமையில் பெட்டிகளை சுமந்து செல்வதற்கோ உங்களுக்கு எந்த ஒரு பணியும் கிடையாது. அதேபோல துணை ராணுவத்தினருக்கு வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உண்டான உணவு உள்ளிட்டவைகளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்கு ஏதாவது உடல்நல குறைப்பாடு ஏற்பட்டால் உடனடியாக இங்கு உள்ள எங்களுடைய காவல்துறை அதிகாரிகளும் தெரிவித்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்படும். மேலும் உங்களுடன் உங்களுடைய மருத்துவர் வந்துள்ளார். எனவே உங்களுக்கு என சிகிச்சையும் அவர் அளிப்பார். அதேபோல தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற தேர்தலை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என்று எஸ் பி ஆல்பர்ட்ஜான் துணை ராணுவத்தினரிடம் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பிக்கள் மற்றும் ராணுவ கமாண்டோக்கல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post பாராளுமன்ற தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை appeared first on Dinakaran.

Tags : Tirupattur district ,SP ,Tirupattur ,Albert John ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...