×

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை பெருவிழா நிகழ்ச்சி 18 நாட்கள் நடைபெறும்.

இந்நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நிகழ்வு நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெறும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chitra festival ,Tanjore Big Temple ,Thanjavur ,Thanjavur Great Temple ,Rajaraja Chola ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...