×

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் புகழேந்தி. 71 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பிய புகழேந்தி, நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அப்போது மேடையிலேயே மயங்கி விழுந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகழேந்தி கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புகழேந்திக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து மருத்துவக்குழு விரைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனை முன்பு திமுகவினர் திரளானோர் கூடியுள்ளனர். காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து திமுகவினர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி.

The post விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!! appeared first on Dinakaran.

Tags : Wickrevandi ,MLA ,Bugalendi ,Villupuram ,DMK MLA ,Bhujahendi ,Bhujaendhi ,Vikravandi Legislative Assembly ,Vikravandi MLA ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. இன்று பதவியேற்பு