- எரிசாராயம்
- Peravarani
- பேராவூரணி
- பட்டுக்கோட்டை
- Puthukkottai
- மதுரை மண்டல நுண்ணறிவு பிரிவு
- டிஎஸ்பி
- காசி விஸ்வநாதன்
- திருச்சி மத்திய மண்டல உளவுப் பிரிவு
- இன்ஸ்பெக்டர்
- தின மலர்
பேராவூரணி : பேராவூரணி ,பட்டுக்கோட்டை ,புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் உள்ள பார்களில் போலி மது விற்பனை செய்யப்படுவதாக சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், மதுரை மண்டல நுண்ணறிவுப்பிரிவு டிஎஸ்பி காசிவிஸ்வநாதன், திருச்சி மத்திய மண்டல நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பேராவூரணி அருகே பெருமகளூரில் போலி மது விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு ராஜ்குமார், புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரம் சங்கர்,மச்சுவாடி மாரிமுத்து ஆகியோரை கடந்த மார்ச் மாதம் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த போலி மதுப்பாட்டில்கள் ,சரக்குவேன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் பகுதியில் போலி மது தயாரிக்கும் மூலப்பொருட்களான எசன்ஸ் ,லேபிள்,கம்பெனிகளின் போலி ஸ்டிக்கர், மூடி, மூடிகளை லாக் செய்யும் இயந்திரம் ,எரிசாராயம் ஆகியவற்றை விவசாயி ஒருவரின் ஆள் நடமாட்டம் இல்லாத தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் தோட்டத்தில் ஆய்வு செய்து 4 பேரல் எரிசாராயம்,மற்றும் போலி மது தயாரிப்பதற்கான அனைத்து மூலப்பொருட்களையும் கைப்பற்றி இதுதொடர்பாக மேலும் பாலமுருகன்,சேகர்,வீரன் ஆகியோரை கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கைப்பற்றப்பட்டு பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் வசமிருந்த பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி லேபிள் ஒட்டப்பட்ட 620 எண்ணிக்கையிலானகுவார்ட்டர் மது பாட்டில்களையும், 4 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த, போலி மது தயாரிக்க வைத்திருந்த 680 லிட்டர் எரிசாராயத்தையும் நேற்று பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அழகேசன், பேராவூரணி பார் கவுன்சில் செயலாளர் சிவேதி நடராஜன் ஆகியோர் முன்னிலையில் பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி, எரிசாராயத்தையும், போலி மதுபாட்டில்களையும் கொட்டி அழித்தனர். அப்போது மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயா, தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உடன் இருந்தனர்.
The post பேராவூரணியில் நீதிபதி முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், போலி மது அழிப்பு appeared first on Dinakaran.