- நீடாமங்கலம்
- நீடாமங்கலம்
- நீதமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் வளாகம்
- தஞ்சாவூர்
- சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்
- தின மலர்
*வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்
நீடாமங்கலம் : நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் களையை கட்டுப்படுத்துவதில் கருவி குறித்து வேளாண் கல்லூரி மாணவிகளின் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் நீடாமங்கலத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயலில் பயிர் சாகுபடியில் ஒரு பகுதியாக களையெடுத்தலில் ஈடுபட்டனர். கோனோவீடர் என்னும் கருவியை கொண்டு களைகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தைச் செயல்முறையால் எடுத்து காட்டினர்.
நெல் சாகுபடியில் கோனோவீடர் கருவியின் முக்கியத்துவம், திறன் மற்றும் அதன் பயன்பாடுகளை விவரித்தனர்.ஆட்களை வைத்து களை எடுப்பதை விட கோனோவீடர் கருவியை வைத்து களை எடுப்பது விவசாயிகளுக்கு செலவு மிகவும் குறைவு என்பதை வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
The post நீடாமங்கலம் பகுதியில் களையை கட்டுப்படுத்த கோனோவீடர் கருவி appeared first on Dinakaran.