- கேரளா
- முதுமலை
- கடலூர்
- நீலாம்பூர்
- அமைதியான பள்ளத்தாக்கு
- முதுமலை டைகர் ரிசர்வ்
- நீலகிரி மாவட்டம்
- தின மலர்
கூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளுக்கு கேரளாவின் நிலம்பூர் மற்றும் சைலன்ட் வேலி பகுதியில் உள்ள யானைக் கூட்டங்கள் இடம் பெயர்ந்துள்ளன. அங்குள்ள வனப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளவும் உணவு தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இவ்வாறு இந்தப் பகுதி யானைகள் கூட்டமாக இடம் பெயர்கின்றன. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தின் தமிழக எல்லை வனப் பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக திரிவதை காண முடிகிறது.
இது குறித்து விலங்குகள் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கூடலூர், முதுமலை சத்தியமங்கலம் வனப் பகுதி யானைகள் இக்கால கட்டத்தில் இடம் பெயர்ந்து கர்நாடக வனப் பகுதியில் கபினி மற்றும் நாகர்ஹோலே வரை சென்று விடுவதும் கேரள பகுதி யானைகள் கூடலூர் மற்றும் முதுமலை பகுதிக்கு வருவதும் வாடிக்கை. மே மற்றும் ஜூன் மாதங்களில் பருவ மழை துவங்கிய பின் கேரள வனப் பகுதியில் இருந்து வந்த யானைகள் மீண்டும் திரும்பிச் செல்லும்.
அதே நேரத்தில் கர்நாடக மாநிலம் கபினி பகுதிக்கு சென்ற யானைகள் முதுமலை, பந்திப்பூர் வனப் பகுதிகளுக்கு திரும்பும். இந்த இடப்பெயர்வு நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நிகழும்’’ என்றார்.
The post முதுமலைக்கு இடம் பெயர்ந்துள்ள கேரள காட்டு யானைகள் கூட்டம் appeared first on Dinakaran.