×

நாகர்கோவிலில் சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி

*போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில் : நாகர்கோவிலில் விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட இடங்களில் சென்டர் மீடியன்கள் உள்ளன. சமீப காலமாக வாகனங்கள் அதி வேகமாக வந்து சென்டர் மீடியன்களில் மோதி விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி உள்ளது. கடந்த மாதம் நாகர்கோவில் டெரிக் ஜங்சன் பகுதியில், சென்டர் மீடியனில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது. வடசேரி, பார்வதிபுரம் கட்டையன்விளை, வெட்டூர்ணிமடம் ஆகியவற்றில் அடுத்தடுத்து சென்டர் மீடியன்களில் டாரஸ் லாரிகள் மோதின. கடந்த மாதம் மட்டும் 10 சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில், வடசேரி எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பில் உள்ள சென்டர் மீடியனில் டாரஸ் லாரி மோதியது. இதில் டாரஸ் லாரியின் முன் பகுதியும் நொறுங்கியது. இதே போல் சென்டர் மீடியனில் இருந்த கான்கிரீட் கற்களும் நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் அந்த வழியாக வராததால், உயிர் சேதம் எதுவும் நிகழ வில்லை. விபத்து நடந்த சிறிது நேரத்தில் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு டாரஸ் லாரி அகற்றப்பட்டது. சென்டர் மீடியன்களும் ஒழுங்கு செய்யப்பட்டன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்டர் மீடியன்களில் மோதி வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி உள்ளன.

நாகர்கோவில் மாநகரில் சாலைகள் குறுகியதாக உள்ளன. இதுவும் விபத்துக்கு காரணமாக உள்ளது. இது தவிர டாரஸ் லாரி டிரைவர்களும் ஒழுகீனமற்ற முறையில் வாகனத்தை ஓட்டி வருகிறார்கள். நேற்று அதிகாலை டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. இதுவே இடதுபுறம் சென்று இருந்தால் பெட்ரோல் பங்க் மீது மோதி பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என பொதுமக்கள் கூறினர்.

The post நாகர்கோவிலில் சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி appeared first on Dinakaran.

Tags : TAURUS ,CENTRE MEDIAN ,NAGARGOVILLE ,Nagarko ,Nagarkovo ,Centre ,Median ,Nagercoil ,Dinakaran ,
× RELATED ரிஷபம்