×

ஜப்பான் ஹோன்சோ நகரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.4ஆக பதிவு

ஹோன்சோ: தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ம் தேதி 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

தைவானில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 9 பேர் உயிரிழந்தனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஜப்பானின் ஹோன்சோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது.

The post ஜப்பான் ஹோன்சோ நகரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.4ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Honshu, Japan ,Honshu ,Taipei ,Taiwan ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு!