×
Saravana Stores

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்திரா கணேசன் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை நேற்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேர்தல் ஆணைய இலட்சினை வடிவம் மற்றும் Vote 100% எனும் வடிவில் மாணவ, மாணவர்கள் நிற்கும் நிகழ்ச்சியினையும் பார்வையிட்டார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் டோலர்ஸ் செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காதுகேளாதோருக்கான மற்றும் வாய்பேச இயலாதவர்களுக்கான மாதிரி வாக்குச்சாவடியையம், தோ்தல் தொடர்பாக வரையப்பட்ட ஓவியங்கள், கோலங்கள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை பார்வையிட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் வேலுமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, மாற்றத்திறனாளி நலத்துறை அலுவலர் சந்திரமோகன், உதவி செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,District Collector ,Indira Ganesan College ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளுக்கு இடையே வாலிபால் போட்டி