- கிளாசிக் அதிகாரமளித்தல் சாம்பியன்ஷிப்
- மன்னார்குடி கல்லூரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மன்னார்குடி
- தேசிய மூத்த ஆண்கள் மற்றும்
- பெண்கள் கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2024
- ஹைதராபாத், தெலுங்கானா
- தமிழ்நாடு, கேரளா
- கிளாசிக் வழுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி
- தின மலர்
மன்னார்குடி, ஏப். 6: தேசிய சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிளாசிக் வலுதூக்கும் சாம்பியன் ஷிப் 2024 போட்டிகள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள மாநி லங்களில் இருந்து இரு பால் வீரர்கள் கலந்து கொண்டுதங்களது திறமை களை வெளிப்படுத்த உள்ளனர்.
இதில் , பங்கேற்கும் தமிழ்நாடு சீனியர் பெண்களுக்கான வலுதூக்கும் அணி யில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை வரலாறு கல்வி பயிலும் மாணவி நிறைமதி, தேர்வாகி உள்ளார். இந்த நிலையில், தமிழக அணிக்கு தேர்வாகி உள்ள மனைவி நிறைமதியை கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேந்திரன் பாராட்டி வாழ்த்தினார். அப்போது, உடற்கல்வி இயக்குநர் முனைவர் ராம்குமார், கல்லூரி விளையா ட்டு குழு உறுப்பினர்கள் கண்ணன், மீனா, பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post கிளாசிக் வலுதூக்கும் சாம்பியன் ஷிப் போட்டி: தமிழக அணிக்கு மன்னார்குடி கல்லூரி மாணவி தேர்வு appeared first on Dinakaran.