தஞ்சாவூர், ஏப்.6:சென்னையில் இருந்து 1225 டன் உரம் தஞ்சாவூருக்கு நேற்று வந்தது. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் விளைவிக்கும். இது தவிர கோடை கால சாகுபடியும் நடைபெறும். மேலும் நிலக்கடலை, எள், உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் சாகுபடி செய்யப்படும்.இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
அதன்படி நேற்று சாகுபடிக்கு தேவையான 1225 டன் யூரியா உரம் சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு வந்தது. 21 வேகன்களில் வந்த இந்த உரங்கள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
The post சென்னை- தஞ்சாவூருக்கு 1225 டன் உரம் வந்தது appeared first on Dinakaran.