- பெரம்பலூர்
- தனலட்சுமி
- பெண்களுக்கான ஸ்ரீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தானலகசுமிசினிவாசன்
- கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
- மனித வள அபிவிருத்தித் திணைக்களம்
- கல்லூரி கலைக்கூடம்
- தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்
- வேந்தர்
- வேந்தர் சீனிவாசன்
- தனலட்சுமி சீனிவாசன்
- மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பெரம்பலூர், ஏப்.6: பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன் மகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மனித வள மேம்பாட்டுத் துறை நடத்தும் பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைப்பெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கணினி அறிவியல் துறை இணைப்பேராசிரியர் வாணீஸ்வரி வரவேற்றார். வேந்தர் பேசுகையில், வளாக நேர்காணலில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.
நமது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் உண்மை இருக்க வேண்டும். ஒழுக்கம், நேர்மை ஆகிய நன்னெறிகளில் நின்று மனதில் உறுதி கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார். வளாக நேர்காணலுக்கு சிறப்பு விருந்தினரான வந்திருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மனிதவளமேம்பாட்டு துறை யுஜிசி இயக்குனர் செந்தில்நாதன் மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம்,மாணவிகளிடத்தில் 5 திறன்களை (படைப்பாற்றல், இணைந்து செயல்படுதல், மொழியாற்றல், தன்னம்பிக்கை, புதுமையான சிந்தனை) பற்றி எடுத்துரைத்தார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார்.
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா பேசினார். 2023-2024ம் ஆண்டு வளாக நேர்காணலில் மகளிர் கல்லூரி இளங்கலை முதுகலை மாணவிகள் சுமார் 751 மாணவிகள் பல்வேறு நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும முதல்வர்கள், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறினா்.
The post பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலைஅறிவியல் கல்லூரியில் பணி நியமனஆணை வழங்கும் விழா appeared first on Dinakaran.