தர்மபுரி, ஏப்.6: தர்மபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடியில், நேற்று முன்தினம் 47 விவசாயிகள் 3,688 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இது ₹15 லட்சத்து 14 ஆயிரத்து 771க்கு ஏலம் போனது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 57 விவசாயிகள், நேற்று 3,554 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் வெண்பட்டுக்கூடு கிலோ அதிகபட்சமாக ₹481க்கும், குறைந்தபட்சமாக ₹281க்கும் சரசாரியாக ₹411க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக நேற்றைய ஏலத்தில் ₹14 லட்சத்து 63 ஆயிரத்து 590க்கு பட்டுக்கூடுகள் ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ₹14.63 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம் appeared first on Dinakaran.