- Senchi
- செஞ்சி
- விழுப்புரம் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிறகு நான்
- Kampam
- சேலம்
- கிருஷ்ணகிரி
- வேலூர்
- திருவண்ணாமலை
- கடலூர்
- புதுச்சேரி
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
செஞ்சி, ஏப். 6: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று அதிகாலையில் தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்தனர். மேலும் ஏராளமான வியாபாரிகள் வாகனங்களில் செஞ்சி வாரச்சந்தைக்கு வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வாரச்சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் ரூ.3 கோடிகள் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்தனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அதிக அளவில் வராததால் ஆடுகளின் விற்பனை மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post செஞ்சி வாரச்சந்தையில் ₹3 கோடிக்கு ஆடு விற்பனை தேர்தல் கெடுபிடியால் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.