×

ஒன்றிய ஆட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டும் பொய்யான வாக்குறுதியை அளித்து பா.ஜ. ஏமாற்றுகிறது விஜய் வசந்த் எம்.பி. பிரசாரம்

கருங்கல், ஏப்.6: ஒன்றிய பா.ஜ. அரசு, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி உள்ளது. இந்த அரசை தூக்கியெறிய வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கூறினார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங். வேட்பாளர் விஜய் வசந்த் நேற்று காலை கருங்கல் தபால் நிலையத்தின் முன்பிருந்து காலை 9 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2019ல் எனது தந்தை வசந்தகுமாரை வெற்றி பெற செய்தீர்கள். அவர் இறந்த பிறகு அந்த வாய்ப்பினை எனக்கு கொடுத்தீர்கள். மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பினை கொடுங்கள். பல்வேறு நல்ல திட்டங்களை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து இருக்கிறேன். 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த வில்லை. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் பாஜகவினர். மீண்டும் பொய்யான வாக்குறுதிகளையே கூறி வருகின்றனர். ஒன்றியத்தில் உள்ள பா.ஜ. ஆட்சியை தூக்கி எறியும் நேரம் வந்து விட்டது. வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரியால் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என அனைவருக்கும் தெரியும். குமரி மக்களின் நீண்ட நாள் கனவாக முடங்கி கிடந்த நான்கு வழிச்சாலை திட்டத்தை மீண்டும் துவங்குவதற்காக போராடினேன். இதனால் ரூ. 1,041 கோடி ஒதுக்கப்பட்டு சாலைப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எல்லா தரப்பினரின் குறைகளையும் தீர்க்கும் வகையில் செலவு செய்து இருக்கிறோம். தமிழ்நாடு , புதுவையையும் சேர்த்து நாற்பது தொகுதிகளிலும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து கொல்லன்விளை, சிந்தன் விளை, செல்லங்கோணம், வட்ட விளை, ஓலவிளை, கருக்கி, முருங்கவிளை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கருங்கல் மார்க்கெட்டில் மீன் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள் உள்பட அனைத்து வியாபாரிகளிடமும் நடந்து சென்று விஜய் வசந்த் எம்.பி. வாக்கு சேகரித்தார். மீன் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகளிடம் விலையை கேட்ட விஜய் வசந்த் எம்.பி. , ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக உயர்ந்து விட்டன என்றார். அப்போது பெண் வியாபாரிகள், நாங்களுக்கு உங்களுக்கு தான் ஓட்டு போடுவோம். நீங்க தான் கண்டிப்பாக ஜெயிப்பீங்க.. என கூறி விஜய் வசந்த்தை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் , மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், திமுக மாவட்ட அவைத்தலைவர் எப்.எம். ராஜரத்தினம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேசியா, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனீஷா கிளாடிஸ், தக்கலை வட்டார தலைவர் பொன் சாலமன், கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய ஆட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டும் பொய்யான வாக்குறுதியை அளித்து பா.ஜ. ஏமாற்றுகிறது விஜய் வசந்த் எம்.பி. பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : EU ,J. ,Vijay Vasant ,Ebony ,Union Pa ,M. B. ,Kanyakumari Parliamentary Constituency Cong ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...