×

மண்டபம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி பயணிகள் வலியுறுத்தல்

மண்டபம், ஏப். 6: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பாம்பன் கடலில் பாம்பன் ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கும் மற்றும் கோவை கன்னியாகுமரி திருப்பதி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் அனைத்தும் தினசரி இரவு நேரத்திலே மட்டும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்கிறது. இதனால் தினசரி மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இதனால் அதிகாலையிலும் இரவு நேரத்திலும் மண்டபம் ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் மண்டபம் ரயில் நிலையத்தில் மூன்று பிளாட்பாரம் அமைந்துள்ளது. இந்த பிளாட்பாரத்தில் குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழாய்களில் குடிநீர் வருவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அதுபோல அதிகாலை 4 மணி முதல் ரயிலில் வருகை தரும் பயணிகள் பிளாட்பாரங்களில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஆதலால் பயணிகளின் நலன் கருதி குடிநீர் வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண்டபம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mandapam railway station ,Mandapam ,Ramanathapuram district ,Pampan railway ,Pampan sea ,Rameswaram ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை