×
Saravana Stores

கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு வரும் 8ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு: ஜூன் 19ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறப்பு

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு வரும் 8ம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தல் இடையில் நடைபெற உள்ள நிலையில், அதற்கேற்ப தேர்வுக்கான அட்டவணை வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், 8ம் தேதிக்கு பிறகு, 15ம் தேதியும், அதன் பின்னர் 21ம் தேதி வரை எந்த தேர்வும் நடத்தப்படாமல், அதற்கடுத்து வரும் நாட்களில் தேர்வுகள் நடத்துவதற்கு ஏற்ற வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. செமஸ்டர் தேர்வை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டு, கல்லூரிகள் திறக்கும் நாளை அறிவிக்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு கல்லூரிகளும் 2023-24ம் கல்வியாண்டின் இறுதி வேலை நாட்களை உறுதி செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம், அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: 2023-24ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை சார்ந்த கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து, கல்லூரி இறுதி பணி நாளை நிர்ணயித்துக் கொள்ளலாம். 2024-25ம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்கு பின், கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு வரும் 8ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு: ஜூன் 19ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Directorate of College Education ,Arts and Science Colleges ,Chennai ,Dinakaran ,
× RELATED பி.எட்., கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு