×

அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு

நெல்லை: நெல்லை மாவட்ட அதிமுகவில் முக்கிய பிரமுகர் ஆர்எஸ் முருகன். இவர் அதிமுகவின் நாங்குநேரி தொகுதி முன்னாள் செயலாளர். தற்போது நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவற்றில் அரசு சாலை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரது அலுவலகம் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று பெருமாள்புரத்தில் உள்ள ஆர்எஸ் முருகனின் அலுவலகத்திலும், விஜயநாராயணத்தில் உள்ள அவரது பங்களாவிலும் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

The post அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Nellai ,RS Murugan ,Nellai district ,Nanguneri ,Highways Department ,National Highways Authority ,Nellie ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...