×

மேல்மருவத்தூர் அருகே ரயில்வே கேட்டில் லாரி மோதல்; தென் மாவட்ட ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி மோதி சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், தென் மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் நேற்று முன்தினம் இரவு ரயில் செல்வதற்காக மூடப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியை வந்த லாரி ஒன்று மூடப்பட்டிருந்த கேட் மீது மோதியது. இதனால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவ்வழியை செல்லும் ஜோத்பூர் ஜிஷீ நாகர்கோவில் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய முத்துநகர் விரைவு ரயில், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய ராமேஸ்வரம் விரைவு ரயில், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயில் ஆகிய ரயில்கள் மேல்மருவத்தூர் மற்றும் மதுராந்தகம் அருகே நிறுத்தப்பட்டன. பின்னர் சிக்னல் பழுது செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டன. ரயில் தாமதம் காரணமாக, பயணிகள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post மேல்மருவத்தூர் அருகே ரயில்வே கேட்டில் லாரி மோதல்; தென் மாவட்ட ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,South ,CHENNAI ,South District ,Kerala ,Sothupakkam ,Chothupakkam ,Southern district ,Dinakaran ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...