×

கடலில் வீசப்பட்ட ரூ.5 கோடி தங்கம் மீட்பு

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மண்டபம் எதிரே உள்ள மணலி தீவு அருகே, கடலோர காவல்படையினரின் ரோந்து படகை பார்த்ததும், ஒரு நாட்டுப்படகு நிற்காமல் சென்றது. சிறிது தூரத்தில் படகில் இருந்தவர்கள் ஒரு பார்சலை கடலில் தூக்கி எறிந்தனர். தொடர்ந்து நாட்டுப்படகை மடக்கி பிடித்து, படகில் இருந்த 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். அதன்பின் அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மண்டபம் ஒன்றியம் வேதாளை பகுதியைச் சேர்ந்த ஹைரோஸ் அலி (40), ஹாஜா ஷரீஃப் (38), ஹம்துன் (37) என இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவர்கள் அதிகாரிகளை கண்டவுடன் தங்கத்தை கடலில் வீசியுள்ளனர். இதனையடுத்து மூவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் கடலில் வீசப்பட்ட தங்கத்தினை தேடும் பணியினை நேற்று முன்தினம் தொடங்கினர்.
இரண்டாவது நாளாக கடலில் தேடிவந்த நிலையில் நேற்று மாலையில் தங்கத்தை கண்டுபிடித்து எடுத்துள்ளனர். அதன் பின்னர் தங்கத்தை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு உயர் அதிகாரிகள் தங்கக் கட்டி பார்சலை உத்தேசமாக மதிப்பீடு செய்ததில் 8 கிலோ வரை இருக்கும் என தெரிய வந்தது. மேலும் இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கடலில் வீசப்பட்ட ரூ.5 கோடி தங்கம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Manali Island ,Mandapam Mandapam ,Ramanathapuram district ,Coast Guard ,Dinakaran ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை