×

விசிக வேட்பாளர்களுக்கு தயாரான மெகா சைஸ் பானை

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் வரும் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் விசி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தேர்தல் சின்னம் `பானை’. மக்களிடம் இந்த `பானை’ சின்னத்தை கவர வைக்க பெரியளவில் பானையை செய்து அனுப்ப புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் முடிவு செய்தார்.

இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்வதற்காக 3 நாட்களுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்தார். இதனை தொடர்ந்து, 4 கலைஞர்கள் இரவு பகல் பாராது உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்து முடித்துள்ளனர். இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டவை. இந்த சைஸ் பானை செய்வது இது தான் முதன்முறை. புதுச்சேரியில் தயாரான இந்த மெகா சைஸ் பானைகள் நேற்று மாலை சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு பானை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இதேபோல், விழுப்புரம் மக்களவை தொகுதிக்கும் பானைகள் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.

* திருமாவளவன் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை
திருமாவளவன் நேற்று அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் முன்புறம், உள்புறம் ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிகாரிகளுக்கு திருமாவளவன் பூரண ஒத்துழைப்பு வழங்கினார். பின்னர் வாகனத்தில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதை தொடர்ந்து திருமாவளவன் தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கி சிவராமபுரம், சன்னாசி நல்லூர் ஆகிய கிராமங்களுக்கு சென்றார்.

The post விசிக வேட்பாளர்களுக்கு தயாரான மெகா சைஸ் பானை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry, Tamil Nadu ,Chidambaram ,Villupuram ,Tamil Nadu ,India ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து வந்து...