×

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: கலெக்டர் வழங்கினார்

செங்கல்பட்டு: தேர்தலில் வாக்களிக்க வேண்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். செங்கல்பட்டு அடுத்த பரனுர் சுங்கச்சாவடியில், மாவட்ட தோட்டக்கலைத்துறை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான அருண்ராஜ், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா, உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆனந்த் குமார் சிங் ஆகியோர் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த அழைப்பிதழ்கள், துண்டு பிரசுங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, மகளிர் சுயஉதவி குழுவினர் மரச்செக்கு எண்ணெய் பாட்டில்களில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 170 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் வீடுகள், உணவகங்கள்,

கடைகளிலிருந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் 20 லிட்டர் கேன்கள், 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் விழிப்புணர்வு `வில்லைகள் ஒட்டிய 8800 தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்யும் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், தோட்டகலைத்துறை அலுவலர் மோகன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா, மகளிர் குழுவினர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

The post பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Collector ,Arunraj ,Paranur toll plaza ,
× RELATED மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை