- காஞ்சிபுரம் பாராளுமன்றம்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க
- அஇஅதிமுக
- மூங்கில்
- நாம் தமிழர்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் ஒவ்வொருநாளும் செய்யும் தேர்தல் செலவுகள் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில், பிரசாரம் மற்றும் வாகன செலவு உள்பட செலவுகள் செய்யப்படுகின்றன.
அதற்காக, செய்யப்படும் தேர்தல் செலவுகள், வேட்பாளர்கள் செலவு கணக்குகளையும் உரிய தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், திமுக வேட்பாளர் க.செல்வம், 1 லட்சத்து 99 ஆயிரத்து 245 ரூபாய் செலவு கணக்கு தாக்கல் செய்துள்ளார். அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் தரப்பில், 11 லட்சத்து 11 ஆயிரத்து 416 ரூபாய் செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதில், 17 லட்சத்து 83 ஆயிரத்து 642 என்றும் தெரியவந்துள்ளது.
அதேபோல, பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் தரப்பில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 120 ரூபாய் ஆனால் அரசு தரப்பில் 9 லட்சத்து 1361 ரூபாய் என்றும், நாம் தமிழர் வேட்பாளர் 1 லட்சத்து 26 ஆயிரத்து 150 ரூபாய் செலவு என கணக்கு தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சுயேட்சை வேட்பாளர்கள் செலவுகள் செய்யவில்லை. இதனால், செலவு இல்லை (நில்) என்று தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் appeared first on Dinakaran.