×

எனக்கு வாக்களித்து எம்பி ஆக்கினால் தாமரையை போன்று மக்களின் வாழ்க்கையை மலர செய்வேன்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

சென்னை: தென்சென்னை நாடாளுன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகர், கெனால் பேங்க் ரோடு, ஆர்.ஏ.புரம் 1வது குறுக்கு தெரு, ஆர்.ஏ.புரம் 7வது பிரதான சாலை, ஆர்.ஏ.புரம் குறுக்கு வீதி, 4வது பிரதான சாலை, கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் மத்தியில் பேசியதாவது: மக்களுக்கு செய்கிற உதவி தான் எனக்கு குறிக்ேகாள்.

தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. நான் யாருமே தயாரிக்க முடியாத ஒரு தேர்தல் அறிக்கையை தென்சென்னை தொகுதிக்கு தயாரித்துள்ளேன். இதில், மக்களின் பிரச்னை மட்டுமல்ல, தென்சென்னையை எப்படி உயர்த்தி கொண்டு வர முடியும். எல்லா தரப்பு மக்களுக்கும் எப்படி உதவி செய்யும் முடியும் என்பதெல்லாம் இடம்பெற்றுள்ளது. விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன். அப்போது தெரியும் தமிழிசை யாரு, எதற்கு இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்று. மக்களுக்கு சேவை செய்ய ஆளுநர் பதவியை விட்டு இங்கு வந்திருக்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் தென்சென்னை தொகுதி மக்களின் வாழ்வு தாமரை போல் மலரும். இவ்வாறு அவர் பேசினார்.

The post எனக்கு வாக்களித்து எம்பி ஆக்கினால் தாமரையை போன்று மக்களின் வாழ்க்கையை மலர செய்வேன்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி appeared first on Dinakaran.

Tags : South Chennai ,BJP ,Tamilisai Soundararajan ,Chennai ,South Chennai National Constituency ,Mylapore Assembly Constituency ,Annai Satya Nagar ,Canal Bank Road ,RA Puram 1st Cross Street ,RA Puram 7th Main Road ,RA Puram Cross Road ,4th Main… ,South Chennai BJP ,
× RELATED காலாவதியான மருந்து விற்றதாக தென்...