×

9 முதல் 12ம் வகுப்பு வரை செல்போன்; நீட், கியூட் தேர்வு கட்டாயமில்லை: புதிய கல்வி கொள்கையில் திருத்தம்

* ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி வழங்கப்படும்.

* பா.ஜ அரசு புதிய கல்விக்கொள்கையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்துள்ளது. கல்வி மாநில உரிமை. எனவே மாநிலங்களின் கல்வி உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எனவே மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்படும்.

* கற்பித்தல் அல்லாத நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவது நிறுத்தப்படும்.வழக்கமான காலியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்வது ரத்து செய்யப்படும்.

* கேந்திர வித்யாலயா, நவோத்யா வித்யாலயா, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளை அதிகரிக்க மாநில அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

* 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்காக ஒவ்வொரு தாலுகாவிலும் அரசு சமுதாயக் கல்லூரி அமைக்கப்படும்.

* ஆன்லைன் படிப்புகள் மற்றும் டிஜிட்டல் கல்வி ஊக்குவிக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் மொபைல் போன்கள் சமமாக இருப்பது உறுதி செய்யப்படும். கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் இணைய சேவை வழங்கப்படும்.

* ஒன்றிய மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கைக்கு உரிய தரநிலையை நிர்ணயிப்பது உறுதி செய்யப்படும். மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட், கியூட் போன்ற தகுதி தேர்வுகள் நடத்துவது மறுபரிசீலனை செய்யப்படும். மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் அமைக்கப்படும். மாநில அரசுகள் இந்த தேர்வுகளை சேர்க்கைக்காக ஏற்றுக்கொள்வது அல்லது மாநில அரசுகள் தனியாக தேர்வு நடத்தி உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்துவது அங்கீகரிக்கப்படும்.

The post 9 முதல் 12ம் வகுப்பு வரை செல்போன்; நீட், கியூட் தேர்வு கட்டாயமில்லை: புதிய கல்வி கொள்கையில் திருத்தம் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...