×

கட்டாய ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு; 12ம் வகுப்பு வரை இலவச மதிய உணவு

1 நாடு முழுவதும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் சுகாதாரப் பிரிவுகள், மருந்தகங்கள் அனைத்திலும் இலவச மருத்துவம் அளிக்கப்படும். அங்கு முழு உடல் பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்துகள், மறுவாழ்வு, நோய்த்தடுப்பு சிகிச்சைகள் வழங்கப்படும்.

2 உலக அளவிலான சுகாதார வசதிக்காக ராஜஸ்தான் மாடல் அடிப்படையில் ரூ.25 லட்சம் வரை பணமில்லா காப்பீடு ஏற்றுக்கொள்ளப்படும்.

3 இந்திய பொது சுகாதார தரநிலை அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, நோய் கண்டறிதல்கள் சேர்க்கப்படும்.

4 மகப்பேறு சலுகைகள் அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும். அனைத்து நிறுவனங்களிலும் கட்டாய ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

5 மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 4சதவீத நிதி 2028-29 க்குள் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும்.

6 கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸ் இரண்டு மடங்காக உயர்த்தப்படும். அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

7 ஆஷா , அங்கன்வாடி, மதிய உணவு சமைப்பவர்களுக்கு ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்.

8 ஒவ்ெவாரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும்.

9 அடுத்த 3 ஆண்டுகளில் மருத்துவ மற்றும் பாராமெடிக்கல் பதவிகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும்.

10 75சதவீத மருத்துவவசதிகள், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் எந்த மருத்துவமனையும் அல்லது மருத்துவக் கல்லூரியும் திறக்க அனுமதிக்கப்படாது.

11 தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் மறுசீராய்வு செய்யப்பட்டு அதில் இருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகள் நீக்கப்படும்.

12 2,500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 2வது ஆஷா பணியாளர் நியமிக்கப்படுவார்.

13 அனைத்து மருத்துவ முறைகளுக்கும் அரசு அனுமதி உண்டு.

14 உற்பத்தி நடைமுறையில் தரத்தை பின்பற்றுவதில் அனைத்து மருந்து உற்பத்தியாளர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படும்.

15 மத்திய அரசு மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.

16 5 ஆண்டுகளுக்குள் 100 சதவீத குழந்தைகள் தடுப்பூசி வழங்கப்படும்.

17 குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதை தடுக்க 12ம் வகுப்பு வரை மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்.

18 மருத்துவ பணியில் ஈடுபடும் போது மருத்துவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்படும்.

The post கட்டாய ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு; 12ம் வகுப்பு வரை இலவச மதிய உணவு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…