×

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பு உயர்த்தப்படும்: எஸ்சி, எஸ்டி, ஓபிசி காலி அரசு பணியிடங்கள் உடனே நிரப்பப்படும்

* நாடு தழுவிய அளவில் சமூக-பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

* எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்த்துவதற்கான அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.

* எந்தவித சாதி, சமூக பாகுபாடு இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவினருக்கும் வேலை மற்றும் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடுகொண்டு வரப்படும்.

* எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பதவிகளில் உள்ள அனைத்து பின்னடைவு காலியிடங்களும் நிரப்பப்படும்.

* அரசு மற்றும் பொதுத்துறையில் ஒப்பந்த வேலைகள் நீக்கப்படும்.

* நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசு நிலம் மற்றும் உபரி நிலம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

* ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகைக்கான நிதி இரட்டிப்பாகும். எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க உதவி செய்யப்படும். பிஎச்டி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்.

* ஒவ்வொரு தாலுகா அளவிலும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான பள்ளிகள் உண்டுஉறைவிட பள்ளிகள் தொடங்கப்படும்.

* சமூக நீதியை பரப்ப பள்ளி பாடத்திட்டத்தில் சமூக சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கை பாடம் சேர்க்கப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், விவாதிக்கவும் அம்பேத்கர் பவன்கள் மற்றும் நூலகங்கள் அமைக்கப்படும்.

* எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு விதி 15(5) சட்டம் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* எஸ்சி துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது கண்காணிக்கப்படும்.

* கையால் மனித கழிவுகளை அள்ளும் பணி ஒழிக்கப்படும். அதனால் பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். துப்புரவு பணியின் போது பலியான ஊழியர்களின் குடும்பங்களுக்கு 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். கழிவுநீர் தொட்டி, மனித கழிவு, சாக்கடைகளை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் வாங்கப்படும். அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் இலவச காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்.

* பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டம் 1989 தீவிரமாக அமல்படுத்தப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டஉதவி வழங்கப்படும்.

* கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் பாகுபாடு பிரச்னையை எதிர்கொள்வதை தடுக்க ரோஹித் வெமுலா சட்டத்தை அமல்படுத்துவோம்.

* நாடோடி பழங்குடியினர் மற்றும் அறிவிக்கப்படாத பழங்குடியினரைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க ரென்கே கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தப்படும்.

பா.ஜ ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அத்துமீறல்

மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால், இந்தியா இனி உண்மையான சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாடாக இருக்காது. ஒரு கட்சி மற்றும் ஒரு நபர் சர்வாதிகாரமாக மாறுவதற்கு ஏற்ப இந்தியா மாறிக்கொண்டு இருக்கிறது. மாநில அரசின் அத்தனை அதிகாரங்களும் முடக்கப்பட்டுவிட்டன. வருவாய் குறைக்கப்பட்டுவிட்டது. மாநிலங்களை நகராட்சிகளாக குறைக்கும் நடவடிக்கை தொடங்கி விட்டன. பா.ஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் மூலம் தேர்ந்தெடுக்ப்பட்ட அரசின் பணியை முடக்குவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். பாஜ அல்லாத தலைவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ய சட்டங்களும், விசாரணை அமைப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. பா.ஜவின் விருப்பத்திற்கு அடிபணிய அவர்கள் வற்புறுதப்படுகிறார்கள். அரசின் பிரசாரமாக மாற ஊடகங்களுக்கு வெகுமதி வழங்கப்படுகின்றன அல்லது மிரட்டப்படுகின்றன.

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம்

1. ஏழை எளிய குடும்பங்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஆண்டுக்கு ரூ. 1லட்சம் நிதி வழங்கும் மகாலட்சுமி திட்டம் தொடங்கப்படும்.

2. குடும்பத்தில் உள்ள மூத்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். ஒரு பெண் இல்லாவிட்டால் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் கணக்கிற்கு மாற்றப்படும்.

3. ஒவ்வொரு ஆண்டும் பல கட்டங்களாக இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படும்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பு உயர்த்தப்படும்: எஸ்சி, எஸ்டி, ஓபிசி காலி அரசு பணியிடங்கள் உடனே நிரப்பப்படும் appeared first on Dinakaran.

Tags : SC ,ST ,OBC ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…