×

சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கோலின்ஸ்

சார்ல்ஸ்டன்: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நடைபெறும் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் விளையாட, உள்ளூர் நட்சத்திரம் டேனியலி கோலின்ஸ் தகுதி பெற்றார். 3வது சுற்றில் சக வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (31 வயது, 40வது ரேங்க்) உடன் மோதிய மயாமி ஓபன் சாம்பியன் கோலின்ஸ் (30 வயது, 22வது ரேங்க்) 6-2, 6-2 என நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி 1 மணி, 11நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மயாமி ஓபன் முதல் சுற்றில் இருந்து கோலின்ஸ் தொடர்ச்சியாக வென்ற 10வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி (28 வயது, 7வது ரேங்க்) தனது 3வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அஸ்த்ரா சர்மாவை (28 வயது, 135வது ரேங்க்), 6-4, 6-1 என நேர் செட்களில் வீழ்த்தினார். இப்போட்டி ஒன்றரை மணி நேரத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஹதாத் மையா (பிரேசில்), டாரியா கசட்கினா (ரஷ்யா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

The post சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கோலின்ஸ் appeared first on Dinakaran.

Tags : Charleston Open Tennis ,Collins ,Charleston ,Danielle Collins ,Charleston Open ,Southern California, USA ,Miami ,Sloane Stephens ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன்