×

கண்ணூர் அருகே குண்டு வெடித்து மார்க்சிஸ்ட் தொண்டர் பலி: 3 பேர் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பானூர் பகுதியை சேர்ந்தவர்கள் வினீஷ் (26), ஷெரின் (28). மார்க்சிஸ்ட் தொண்டர்களான இவர்கள் உட்பட 4 பேர் நேற்று அதிகாலை 1 மணியளவில் அங்குள்ள ஒரு ஆள் இல்லாத வீட்டின் மொட்டை மாடியில் வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் அவர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். வினீஷின் 2 கைகளும் துண்டானது. சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் விரைந்து சென்று அவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி ஷெரின் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

The post கண்ணூர் அருகே குண்டு வெடித்து மார்க்சிஸ்ட் தொண்டர் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : MARXIST ,KANNUR ,Thiruvananthapuram ,Vinesh ,Sherin ,Banur ,Kannur, Kerala ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பள்ளம் தோண்டியபோது...