×

தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ரூ.280 குறைந்தது

சென்னை: வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 28ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி ஒரு சவரன் 51 ஆயிரத்தை கடந்தது. ஏப்ரல் 1ம் தேதி சவரன் ரூ.51,560 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.52 ஆயிரத்தை நெருங்கி விடுமோ என்ற ஏக்கம் நகை வாங்குவோரிடையே இருந்து வந்தது. ஆனால், 2ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு சவரன் ரூ.51,440க்கு விற்கப்பட்டது.

3ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தையும் எட்டியது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,545க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் ஏற்கனவே இருந்த அனைத்து உச்சத்தையும் முறியடித்து, புதிய உச்சத்தை எட்டியது. கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5640 வரை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்து வந்தது. ஏழை, நடுத்தர மக்களுக்கு தங்கம் ஒரு கனவாக மாறிவிடுமோ என்ற ஏக்கமும் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரனுக்கு ரூ.180 குறைந்து ஒரு சவரன் ரூ.52,080க்கும் விற்கப்பட்டது. கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5640 வரை உயர்ந்துள்ளது.

The post தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ரூ.280 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…