×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

வேலூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை என்று தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வரும் 19ம்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் சுதந்திரமான, நியாயமான, அமைதியான, சுமூகமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள் ஆகியவற்றுக்கு வரும் 17ம்தேதி முதல் 19ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் வாக்கு எண்ணிக்கையான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட தேதிகளில் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடுவதற்கு தகுந்த வழிமுறைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யவோ? அல்லது விற்பனைக்கு கொண்டு செல்லவோ கூடாது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Vellore ,Tamil Nadu ,Prohibition ,
× RELATED ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக்...