×

கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான ‘எச்5என்1’ வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதால் எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான ‘எச்5என்1’ வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றுநோயிலிருந்து, உலகம் இன்னும் மீளவில்லை. இதற்கிடையில், விஞ்ஞானிகள் மற்றொரு தொற்றுநோய் குறித்து எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்க்கான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை காட்டிலும் இந்த தொற்றுநோய் மிகவும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். பறவைக் காய்ச்சலின் எச்5என்1 வகை வைரசானது மிகவும் தீவிரமானது என்றும், அதன் மாதிரிகள் பசு, பூனை, மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகளிடம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பால் பண்ணையில் பணிபுரியும் ஒருவருக்கு, இந்த எச்5என்1 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் ‘டெய்லி மெயில்’ வெளியிட்ட செய்தியில், ‘டெக்சாஸில் ஒருவருக்கு எச்5என்1 வைரஸ் பரவி உள்ளது. இது பறவைக் காய்ச்சலாக இருக்கலாம். தற்போது அவருக்கு வைரஸ் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெக்சாஸின் பார்மர் கவுண்டியில் சுமார் 1.6 மில்லியன் முட்டையிடும் கோழிகள் மற்றும் 337,000 குஞ்சுகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டதால், அவை அழிக்கப்பட்டன. ஆனால், தற்போது பறவைக் காய்ச்சல் அபாயம் இல்லை என்றும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க கால்நடை பராமரிப்பு துறை கூறியுள்ளது.

The post கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான ‘எச்5என்1’ வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதால் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,corona pandemic ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...