×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.25 லட்சம் வசூல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல்களில் ரூ.20.25 லட்சம், 31 கிராம் தங்கம், 225 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில். இக்கோயில் உண்டியல்கள் கடந்த 9.1.2024ம் தேதிக்கு பிறகு திறந்து எண்ணப்பட்டது. இதில், 12 பொது உண்டியல்களில் ரூ.18,60,612, திருப்பணி உண்டியலில் ரூ.1,01,405, கோசாலை உண்டியலில் ரூ.63,598 என மொத்தம் 20,25,615 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இவைதவிர தங்கம் 31 கிராமும், வெள்ளி 225 கிராமும் இருந்தது. கோயில் செயல் அலுவலர் ப.முத்து லட்சுமி, ஆய்வாளர் பிரித்திகா, வரதராஜ சுவாமி கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன், சித்ரகுப்தசுவாமி கோயில் செயல் அலுவலர் அமுதா உட்பட அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பாவையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள், தன்னார்வலர்கள் மூலம் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

 

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.25 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Ekambaranathar Temple ,Kanchipuram ,Kanchipuram Ekambarnathar Temple ,Punjabuta ,Elavarguli Sametha Ekamparanathar Temple ,Kancheepuram ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.25 லட்சம் வசூல்