×

கோதுமை பிரட் தக்காளி மசாலா

தேவையான பொருட்கள் :

கோதுமை பிரட் 15 ஸ்லைஸ்
சின்ன வெங்காயம் 150 கிராம்
தக்காளி கால் கிலோ
கடுகு ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மஞ்சள் தூள் 2 சிட்டிகை
எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
கொத்த மல்லி தழை சிறிதளவு
மிளகாய் வற்றல் 10
தனியா ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை :

கோதுமை பிரட்டை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்த மல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு இவற்றை போட்டு சிவக்க வறுத்து எடுத்து ஆறியவுடன் மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும். அடுத்து தக்காளி, மஞ்சள் தூள் போட்டு கரண்டியால் நன்கு மசித்து வதக்கவும்.தக்காளி நன்கு மசிந்தவுடன் வறுத்த பொடி போட்டு நன்கு கிளறவும். கடைசியாக இக்கலவையில் கோதுமை பிரட் துண்டங்களை போட்டு துண்டுகள் உடையாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கவும்.அகலமான பாத்திரத்தில் கோதுமை பிரட் மசாலாவை போட்டு அதன் மேல் கொத்த மல்லி தழைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

The post கோதுமை பிரட் தக்காளி மசாலா appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை