×

ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ.8,000 கோடி சொத்துகள், சொந்தமாக விமானம் : தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு

டெல்லி : ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை பல மடங்கு குறைத்துக் காட்டியிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரம் அடங்கிய பிரமாண பத்திரத்துடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். அவர் வேட்பு மனு தாக்கலின் போது, உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனுவையும் அளித்துள்ளது.

அந்த மனுவில், “உண்மையான சொத்து மதிப்பை மறைத்து, ரூ.36 கோடி சொத்துகளை மட்டும் ராஜீவ் சந்திரசேகர் காட்டியுள்ளார். ராஜீவ் சந்திரசேகர் காட்டியுள்ள ரூ.36 கோடி சொத்துகளில் அவரது சொகுசுக் கார்கள், ஆடம்பர பங்களா போன்றவை இடம்பெறவில்லை. ராஜீவ் சந்திரசேகர் ரூ.6.3 கோடி என கணக்கு காட்டியுள்ள 4 நிறுவனங்களின் மதிப்பு ஒன்றிய அரசின் இணையதளத்தில் ரூ.1,610 கோடி என கூறப்படுகிறது. ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ.8,000 கோடி சொத்துகள் உள்ளன. சொந்தமாக விமானமும் வைத்துள்ளார். ராஜீவ் சந்திரசேகரின் சொத்து விவரங்கள் பல ஊடகங்களில் ஏற்கனவே வெளியாகி உள்ளன. ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை பல மடங்கு குறைத்துக் காட்டியிருக்கிறார். தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ.8,000 கோடி சொத்துகள், சொந்தமாக விமானம் : தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajiv Chandrashekar ,Congress ,Election Commission ,Delhi ,People's Election ,India ,Dinakaran ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...