×

கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு பலவித பரிசுப்பொருட்கள் விநியோகம்: தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் ஏராளமான பொருட்கள் சிக்கின

கர்நாடகா: கர்நாடகா மக்களவை தேர்தல் காலத்தில் உள்ள வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு டிஜிட்டல் கைக்கடிகாரம், ஆண்ட்ராய்டு டிவி, டிஜிட்டல் சுவர் கடிகாரம் என புதுமையான பொருட்களை விநியோகிக்கிறார்கள். வரும் 26ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் வேட்பாளர்கள் ஒரு புறம் விறு விறுப்பாக மனுதாக்கல் செய்து வரும் நிலையில் மறுபக்கம் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை அதிரடியாக வரி வழங்கி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று வரை ரொக்கம் பணம் தங்கம், வெள்ளி நகைகள், மதுபானங்கள் மட்டுமின்றி இலவசமாக கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மிக்சி,கிரைண்டர், குக்கர், சேலைகள், சுடிதார்கள், மதுவகைகள், வாசனை குட்கா பொருட்கள் என ஒட்டுமொத்தமாக 187 கோடி மதிப்பிலான பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து ஷிமோகா, சிக் மங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் அதிரடி சோதனையில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதை தவிர டிஜிட்டல் டிவி, டிஜிட்டல் கைக்கடிகாரம், டிஜிட்டல் சுவர் கடிகாரம் போன்ற நவீன மின்னணு சாதனங்கள் வாக்காளர்களுக்கு தருவதாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால் கர்நாடகா முழுவதும் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது தேர்தல் பறக்கும் படை.

The post கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு பலவித பரிசுப்பொருட்கள் விநியோகம்: தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் ஏராளமான பொருட்கள் சிக்கின appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Lok Sabha ,
× RELATED மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் 51% வாக்குப்பதிவு