×
Saravana Stores

காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.81 கோடி பறிமுதல்

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.81 கோடி ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்தில் 3வது குறுக்கு தெரு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக ஒரு கோடியே 81 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

பணத்திற்கான ஆவணங்களை காரில் வந்த கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார், ஷேர் கலாம் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படையினர் கேட்டனர். ஆனால் ஆவணங்கள் இல்லாததால் பணம் முழுவதையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து பணத்திற்கான வரவு குறித்து 3 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.81 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,RA Puram ,Raja Annamalaipuram South Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது