×

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பற்றி சர்ச்சை கருத்து; சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஆந்திர: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பற்றி சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரப்புரையில் ஜெகன்மோகனை ‘திருடன்’ என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். சந்திரபாபு நாயுடு பேசுகையில்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அரக்கன் திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் போன்ற சொற்களால் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இது ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் லெல்லா அப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார். தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்தது தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 48 மணி நேரத்தில் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

The post ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பற்றி சர்ச்சை கருத்து; சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! appeared first on Dinakaran.

Tags : AP ,Chief Minister ,Jehanmohan ,Election Commission ,Chandrababu Naidu ,Telugu Desam Party ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...