×
Saravana Stores

தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மீதமுள்ள 20% இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து 3 மாதங்களில் மீட்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி

மதுரை: தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கோவிலின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க உத்தரவிட வேண்டும்,”என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சரவணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 850 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி சரவணன், “மீதமுள்ள 20% இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து 3 மாதங்களில் மீட்க வேண்டும். திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையில் போலீஸ், அறநிலையத்துறை இணைந்து செயல்பட்டு நிலங்களை மீட்க வேண்டும். தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை முறையாக அளவீடு செய்து மீட்க வேண்டும்,”இவ்வாறு ஆணையிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

The post தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மீதமுள்ள 20% இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து 3 மாதங்களில் மீட்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tanjore Pashupatiswarar Temple ,Madurai ,Tanjore Pasupadeeswarar temple ,Radhakrishnan ,Thiruthonda Sabha ,High Court ,Tanjore ,Pasupadeeswarar temple ,iCourt ,Dinakaran ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!