×

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்திக் காட்டுவோம்: ராகுல் காந்தி சூளுரை

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்திக் காட்டுவோம் என ராகுல் காந்தி சூளுரை விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர் கூறியதாவது, 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்ததைப் போல் ஊடகங்களில் காண்பிக்கப்படுவதாக ராகுல் குற்றச்சாட்டு வைத்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஊடகத்தால் ஏற்படுத்தப்பட்ட மற்றும் அதே உணர்வுதான் தற்போதும் உள்ளது. வாஜ்பாய் காலத்தில் இந்தியா ஒளிர்வதாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டபோது யார் வென்றது என்பது நினைவிருக்கும்.

The post நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்திக் காட்டுவோம்: ராகுல் காந்தி சூளுரை appeared first on Dinakaran.

Tags : MODI ,RAHUL GANDHI SULURAI ,Delhi ,Rahul Gandhi ,Congress Party for the People's Election ,Congress ,President ,Karke ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...