×

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டரீதியாக உறுதிசெய்யப்படும்: காங்கிரஸ் கட்சி வாக்குறுதி

டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டரீதியாக உறுதிசெய்யப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. ஒன்றிய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்புவோம். அங்கன் வாடியில் கூடுதலாக 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும். அரசு தேர்வுகள் விண்ணப்பக் கட்டணத்தை காங்கிரஸ் ரத்து செய்யும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டரீதியாக உறுதிசெய்யப்படும்: காங்கிரஸ் கட்சி வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Congress party ,Delhi ,Union Govt ,Angan Wadi.… ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...