×

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

பட்டுக்கோட்டை: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்திய அரசுதான் மோடி அரசு. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் சமையல் எரிவாயு ரூ.500-க்கு வழங்கப்படும். சிஏஏ சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்ற ஆதரவு அளித்தவர் பழனிசாமி.

கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 460 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாட்டிலேயே பெண் பணியாளர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். தினம்தோறும் 17 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர். கனடா நாட்டிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். ஒன்றிய நிதியில் தமிழ்நாடு 1 ரூபாய் கொடுத்தால் திரும்பப் பெறுவது 29 பைசா தான். நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப்படும் இவ்வாறு கூறினார்.

The post நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Aidanidhi Stalin ,Batukkottai ,Udayaniti Stalin ,Thanjavur Constituency ,M. Assistant Minister ,Stalin ,Murasoli ,Minister Assistant Minister ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...