×

தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலி ஆட்டம் கண்டது ஆட்டுச்சந்தை

வேடசந்தூர் : தேர்தல் நடத்தை விதிமுறையால் பணம் கொண்டு வருவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அய்யலூர் ஆட்டுச்சந்தையில் கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் குறைந்தளவே வந்திருந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் வியாழக்கிழமைதோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்க அதிகளவில் வருகின்றனர்.

நேற்று அதிகாலை சந்தை கூடியது. விரைவில் ரம்ஜான் பண்டிகை வரவுள்ளதால் கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை ெகடுபிடியால் சந்தையில் வழக்கத்தை காட்டிலும், கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.இதுகுறித்து திண்டுக்கல் கறிக்கடை உரிமையாளர் மணி(34) கூறியதாவது:

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வியாபாரிகள் பணம் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளது. ரூ.49 ஆயிரம் கொண்டு வந்தால் 2 முதல் 3 ஆடுகள் மட்டுமே வாங்க முடியும். ஆடு வாங்கும் போது கடன் சொல்லவும் முடியவில்லை. இதுபோல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் அதிகாரிகள் இதுபோல் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை புரிந்து கொண்டு விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.

The post தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலி ஆட்டம் கண்டது ஆட்டுச்சந்தை appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Ayyallur goat market ,market ,Ayyalur ,Vedasandur, Dindigul district ,Dindigul ,Madurai ,Trichy ,
× RELATED கிணற்றில் விழுந்த மயில் மீட்பு