டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
The post மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.