டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்; வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக தொடரும்; 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமே ரெப்போ எனப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்வதால், வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டி விகிதங்களில் மாற்றமிருக்காது. பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது; பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. இவ்வாறு கூறினார். உள்நாட்டு வளர்ச்சியை நோக்கி, நிலையான முதலீடு மற்றும் மேம்பட்ட உலகளாவிய சூழல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும். 2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.6% ஆக உள்ளது.
இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டான 7% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியாகும். ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் நாட்டின் மொத்த பணவீக்கம் 5.1% ஆகக் குறைந்துள்ளது. பணவீக்கத்தில் கவனம் செலுத்தி 4% இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். மார்ச் 29, 2024 நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 645.6 பில்லியன் டாலரை எட்டியது இவ்வாறு கூறினார்.
The post வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 6.5%-ஆகவே தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு! appeared first on Dinakaran.